வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

இந்தி ஒரு மாசடைந்த மொழி - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மொழியியல் ஆய்வரின் கருத்து



இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மொழியியல் ஆய்வர் ஒருவரின் கருத்தைப் பாருங்கள். இந்தி என்பது ஒரு மாசடைந்த மொழி இதை வளர்க்க நினைப்பதோ அல்லது பரப்ப நினைப்பதோ கேவலம் என்ற தொனியில் அவரின் பதிவு அமைந்துள்ளது.

அவருடைய செய்தி 
வணக்கம் நண்பர்களே,

இந்தி சொற்களை ஆய்வு செய்து பார்க்கும்போது அதில் அரபி, பாரசீகம் மற்றும் துருக்கி மொழிகளின் சொற்கள் சுமார் 70-80% பேச்சுவழக்கில் கலந்துள்ளதாகத் தெரிகிறது. இது என்னை ஆச்சரியமடைய வைக்கும் செய்தியாக உள்ளது.

இந்த ஆய்வு இந்தியை எனது சுற்றத்தில் பரப்ப வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் தவறு என்பதை புரியவைத்துள்ளது. மிகவும் மாசடைந்த மொழியான இந்தியை பரப்புவது நல்லதல்ல.

எனப் பதிந்துள்ளார்

ஒரு செம்பு பாலில் 80% பலவகையான நீரை கலந்தால் அதைப் பால் என்று எவ்வாறு சொல்ல முடியும். அதுபோல் தான் இந்தியின் நிலை. எல்லா மொழிகளிலும் பிறமொழிகளின் கலப்பு இருக்கும், ஆனால் பிறமொழியையே இந்தி என்று சொல்வது எவ்விதத்திலும் நியாயம். இந்தி என்பது தமிழ் மொழியின் கால்தூசிக்கு கூட ஒப்பாகாத மொழி.

இங்கு இந்தியை தூற்றுவதாக எண்ண வேண்டாம். இந்தி என்பது ஒரு மாயை. தமிழர்கள் இந்த மாயையில் மயங்குவதற்கு முன் அதன் உண்மையான உருவத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகே இந்த பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...